மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூதாட்டி மாயமான வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. ஆட்டோ ஓட்டுநர் பயங்கர செயல்.. பதறவைக்கும் சம்பவம்.!
70 வயது மூதாட்டி மாயமான நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உடல் மீட்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுனருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி காரனை பெரியார் நகரில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் (வயது 52) மூதாட்டியை அழைத்து வீட்டில் விடுவதாக தெரிவித்துள்ளார்.
ஆறுமுகத்துடன் சென்றவர் நிலை தெரியாத நிலையில், லட்சுமியின் கணவர் வேடசாமி விஷயம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியபோதே, மூதாட்டி லட்சுமி எஸ்.பி கோவிலை அடுத்த ஆப்பூர் காப்புக்காட்டில் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் நடவடிக்கை உறுதியாகவே, தனிப்படை காவல் துறையினர் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.