மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கடித்துவிட்டு ஆம்புலன்ஸ் ஓட்டும் வேலை.. எச்சரித்த சக பணியாளரை கொன்ற நண்பர்.!
மதுபோதையில் பணிக்கு வரும் அவசர ஊர்தி ஓட்டுனரை ஓனரிடம் சொல்கிறேன் என்று மிரட்டிய சக பணியாளர் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலமையூர், ஒழலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (வயது 35), அஜித் (வயது 35). இவர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரேயிருக்கும் தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், அரசு மருத்துவமனை எதிரேயுள்ள பெரியார் நகரில் உள்ள ஓய்வறையில் விஜயகுமார் மற்றும் அஜித், தங்களின் நண்பர்களான ஒழலூரை சேர்ந்த ராஜா, உத்திரமேரூரை சேர்ந்த தர்மதுரை ஆகியோருடன் மதுபானம் அருந்தியுள்ளனர்.
அப்போது, இவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அஜித், அருகே இருந்த அம்மிக்கல்லை எடுத்து விஜயகுமார் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த விஜயகுமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜா, அஜித், தர்மதுரை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அஜித் தினமும் மதுபானம் அருந்திவிட்டு பணிக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனைக்கண்ட விஜயகுமார், உன்னை ஓனரிடம் சொல்கிறேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை நடந்துள்ளது. அஜித்தை கைது செய்த அதிகாரிகள், சிறையில் அடைத்தனர்.