மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இருசக்கர வாகனம் - வேன் மோதி காங்கிரஸ் கட்சி பிரமுகர் பரிதாப பலி: கூடுவாஞ்சேரியில் சோகம்.!
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நந்திவரம், கூடுவாஞ்சேரி-கிருஷ்ணாபுரம் முதல் தெருவில் வசித்து வருபவர் ஆதிகேசலு என்ற மணி (வயது 66). எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நந்திபுரம் கூடுவாஞ்சேரி காங்கிரஸ் துணை செயலாளராகவும் இவர் பதவி வகித்து வருகிறார். நேற்று காலை நேரத்தில் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அச்சமயம், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த வேன், கண்ணிமைக்கும் நேரத்தில் இவரின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆதிகேசவலு, நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரை விட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.