"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
கறைபடியும் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள்; கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் மகிதா பணியிடைநீக்கம்.. காரணம் என்ன?.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளராக வேலைபார்த்து வருபவர் மகிதா. 17 வயது சிறுமி ஒருவருக்கு அரசு மருத்துவர் கருக்கலைப்பு செய்ததாக தெரியவருகிறது.
இந்த தகவலை அறிந்த காவல் ஆய்வாளர் மகிதா, அரசு மருத்துவரை மிரட்டி ரூ.12 இலட்சம் பணம் இலஞ்சமாக பெற்றுள்ளார். பணத்தை கொடுத்த அரசு மருத்துவர், உயர் அதிகாரிகளிடம் புகாரையும் சேர்த்து கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், துறை ரீதியான விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதே கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தேநீர் கடையில் டீ குடித்துவிட்டு பணம் தரமறுத்து அட்ராசிட்டி செய்த வீடியோ வெளியாகி 4 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த விசாரணை நடத்தும் மகளிர் காவல்நிலைய அதிகாரிகளே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது அதிர்ச்சியை தருவது மட்டுமல்லாது, அவர்களின் விசாரணை நீதியின் உண்மைத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.