மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலாற்று கரையோரம் காதல் ஜோடியின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு.. கொலையா? தற்கொலையா?..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம், வாயலூர் பகுதியில் பாலாற்றுப்படுகை உள்ளது. இந்த பாலாற்று கரையோரம் அழுகிய நிலையில் வாலிபர் - இளம்பெண்ணின் உடல்கள் கிடந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சதுரங்கப்பட்டினம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினரின் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டு உடல்களும் அருகருகே இருந்ததால் காதல் ஜோடியின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் சுற்றுவட்டாரத்தில் மாயமானவர்கள் தொடர்பான தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.