#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இர்பான் கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரம்; இர்பானின் மீது திரும்பும் விசாரணை..!
யூடியூபில் உணவகங்களுக்கு சென்று உணவின் தரம் மற்றும் சுவை குறித்த வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான நபர் இர்பான். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், தஞ்சாவூரில் இருந்து இர்பான் சென்னை திரும்பிய போது, அவருடன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் பகுதியில், சாலையை கடந்த வயோதிக பெண்மணி மீது கார் மோதியது.
சொகுசு கார் மோதி ஏற்பட்ட விபத்தில் நிகழ்விடத்திலேயே பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காரை தான் இயக்கியதாகவும், இர்பான் அங்கு இல்லை என்றும் அசாருதீன் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அங்கு உண்மையில் இர்பான் இல்லையா? என்ன நடந்தது என தொடர் விசரனை நடந்து வருகிறது.