மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமி கர்ப்பம்: 17 வயது மாணவனின் அதிர்ச்சி செயல்.. காதல் பெயரால் நெருங்கி சோகம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் 12ம் வகுப்பு பயிலும் சிறுவன், மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இருவரும் நட்பாக பழகி காதல் வயப்பட்டுள்ளனர்.
காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்ததாக கூறப்படும் நிலையில், உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளது. இதனிடையே, சிறுமியின் நடவடிக்கையில் எழுந்த மாற்றத்தால் சந்தேகமடைந்த பெற்றோர், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.
அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. உடனடியாக பெற்றோர் கருக்கலைப்பு செய்ய மருத்துவரிடம் கூறவே, 17 வயது சிறுமி என்பதால் அவர் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 12ம் வகுப்பு மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.