மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மோடியின் பிறந்தநாளுக்கு "சமூக நல்லிணக்க பெரியாரே" பட்டத்துடன் பேனர்.. எதிர்ப்பு குரலால் பரபரப்பு..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நாளை (செப் 17) கொண்டாடப்படுகிறது. இந்திய திருநாட்டை 2-ம் முறையாக தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஆட்சி செய்து வரும் நரேந்திர மோடியின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக சிறப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பாஜக சார்பில் அந்நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நாளைய தினத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பிறந்தநாளை கொணடாடும் வகையில் பல்வேறு இடங்களில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், "சமூக நல்லிணக்க பெரியாரே" என்ற அடைமொழியோடு பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. இதில், யார் பெரியார்? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
முன்னதாக அம்பேத்கரும் மோடியும் ஒன்றே என்பதை போல இளையராஜா பேசியதற்கு பல கண்டன குரல் எழுந்த நிலையில், சமூக நல்லிணக்க பெரியார் விவகாரத்திற்கு எங்கிருந்து குரல் எழும் என்பது தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிகின்றன.