மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: செங்கல்பட்டில் சரக்கு இரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து: சென்னை செல்லவேண்டிய பயணிகள் இரயில்கள் தாமதம்.!
விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை சரக்கு ரயில் ஒன்று பயணம் செய்தது. இந்த சரக்கு இரயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் பகுதியில் பயணம் செய்த போது, எதிர்பாராத விதமாக ரயிலின் பத்து பெட்டிகள் திடீரென தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி இருக்கின்றன.
இதனையடுத்து, உடனடியாக தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அவ்வழியாக வந்து கொண்டிருந்த ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
நிகழ்விடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் எழும்பூரில் இருந்து காலையில் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய ரயில்களும், தென் மாவட்டத்திலிருந்து சென்னை வர வேண்டிய ரயில்களும், செங்கல்பட்டு சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில்கள் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.