மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்சார இரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப பலி: காது கேட்காத குழந்தைகளுக்கு நடந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்..!
கர்நாடக மாநிலத்தை சார்ந்த சிறுவர்கள் மஞ்சுநாத் (வயது 11), ரவி (வயது 12), சுரேஷ் (வயது 15).
சிறுவர்கள் மூவரும் விடுமுறைக்காக சென்னையில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
மூவரும் ஒன்றாக சேர்ந்த அங்குள்ள ரயில் வழித்தடத்தில் நடந்து சென்றதாக தெரிய வருகிறது.
இவர்களில் அண்ணன் - தம்பியான சுரேஷ் மற்றும் ரவி செவித்திறன் குறைபாடு கொண்ட குழந்தைகள் ஆவார்கள். மஞ்சுநாத் வாய் பேச இயலாதவர்.
இந்நிலையில், மூவரும் தண்டவாளத்தில் நடந்த சென்றபோது, புறநகர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இரயில்வே காவல்துறையினர், அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் அப்பகுதி மக்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.