மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடுமை! ஆபரேஷன் தியேட்டரில் மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணுக்கும் பாலியல் தொல்லை; எங்கு தெரியுமா?
சென்னை பெருங்குடியில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த (மேற்குவங்கம்) செளமிதா போஸ்(30) என்பவர் மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் முழுமையாக குணமடையாததால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி கடந்த 5 ஆம் தேதி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டரில் அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மயக்கத்தில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்த டில்லி பாபு என்பவர் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்துள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு இந்த விஷயத்தை அந்தப் பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும், காவல் நிலையத்தில் புகார் ஒன்றினையும் அளித்துள்ளார். அந்த புகாரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்னிடம் மருத்துவமனை ஊழியா் பாலியல் தொல்லை அளித்தாா். ஆனால் நான் அரை மயக்கத்தில் இருந்ததால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தாா்.
முதலில் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. அதன்பிறகு போலீசாரின் முயற்சியால் அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனை ஊழியரான டெல்லி பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பிரபல மருத்துவமனையில் ஆப்ரேஷன் தியேட்டரில் மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.