மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரதமரின் காலில் விழுந்த திமுக.. "இரட்டைக்குதிரை பயணியாக..,".. வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்..!
திமுக பசப்பு வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் திமுக தமிழர்களின் உரிமைகளை காவுகொடுத்தது என முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னையில் வைத்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "திமுகவினர் வரிசையாக காவடி எடுப்பது போல் டெல்லி செல்கின்றனர். திமுகவினர் இரட்டை குதிரையில் பயணம் செய்பவர்கள். அவர்கள் ஒரு குதிரையில் செல்லமாட்டார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. கமிஷன் நடவடிக்கை எடுக்க முயற்சித்தபோது, தமிழர்களின் உரிமைகளை அன்று காவுகொடுத்தார்.
அன்று கருணாநிதி விட்டுக்கொடுத்த கச்சத்தீவை, இன்று ஸ்டாலின் மீட்பராக கூறுகிறார். இது பசப்பு வார்த்தைகள். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. பல்வேறு ஊழல் வழக்கில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற திமுக தலைவர் டெல்லி சென்று பிரதமரின் காலில் விழுந்துள்ளார். வாஜ்பாய் ஆட்சியில் இருக்கையில் நாங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தோம். நாங்கள் 5 கோரிக்கை வைத்தோம். அதில், காவேரியை பாதுகாக்க வைக்கப்பட்ட கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் பாஜகவுக்கு நாங்கள் அளித்த ஆதரவை பெற்றுக்கொண்டு, முழுவதுமாக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். வன்னியர்கள் இட ஒதுக்கீடு இரத்து விவகாரத்தில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தை சரியாக எடுத்து வைக்கவில்லை. தமிழகத்தில் போதைப்பொருட்கள் சர்வ சாதரணமாக உலாவி வருகிறது. இதனால் 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு காவல் துறையினரை அதிமுகவை ஒடுக்க வேண்டும் என்று உபயோகித்து வருகிறது. திமுக தமிழகத்தை சீரழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.