மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற 1,366 நட்சத்திர ஆமைகள் மீட்பு..! சுங்கத்துறை அதிரடி.!
மலேசியாவிற்கு கடத்த முயன்ற 1,366 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் மீட்கப்பட்டது.
சென்னையில் இருந்து மலேசியாவிற்கும் - மலேஷியாவில் இருந்து சென்னை மற்றும் திருச்சிக்கும் வந்து செல்லும் விமானங்களில் அவ்வப்போது கடத்தல் பொருட்கள் பிடிபடுவது வாடிக்கையாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து மலேஷியா செல்லும் விமானம் புறப்பட தயாராகிக்கொண்டு இருந்த நிலையில், அதில் இந்திய வகை நட்சத்திர வகை ஆமைகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, களத்தில் இறங்கிய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அட்டைபெட்டையில் வைத்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்பட்டது உறுதியானது. சுமார் 1,366 நட்சத்திர ஆமைகள் அட்டைப்பெட்டியில் அடித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
நட்சத்திர ஆமைகளை மீட்ட அதிகாரிகள், மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, மறுவாழ்வு மையத்தில் ஆமைகளை வைத்துள்ளனர். ஆமைகளை கடத்த முயன்றது யார்? யாருக்கு பார்சல் அனுப்பப்பட்டது? என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.