மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: சென்னை விமான நிலையத்தில் CISF அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..! பரபரப்பு..!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், மத்திய தொழிற்படை பாதுகாப்பு துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதியில் திடீர் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிதறியோட, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், கழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, 26 வயதுள்ள மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரி யஸ்வால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில், அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை நடந்தது வருகிறது. சென்னை மாநகர காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.