திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இருசக்கர வாகனம் மோதி தாய்-கைக்குழந்தை உயிரிழந்த விவகாரம்; வாலிபர்-தோழி கைது..!
திருமணத்திற்கு சென்றுவிட்டு அதிகாலை நேரத்தில் அதிவேகத்தில் பயணம் செய்த ஜோடியால் தாயும், கைகுழந்தையும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அமைந்தகரையில் வசித்து வருபவர் சஞ்சீவ் (வயது 35). இவரின் மனைவி பூங்குழலி (வயது 28). தம்பதிகளுக்கு 6 வயதுடைய மகள், 6 மாத பெண் குழந்தை இருக்கிறது. சஞ்சீவ் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். கடையில் ஆயுத பூஜை கொண்டாட கடந்த அக்.4 ம் தேதி அதிகாலை 4 மணியளவில் சஞ்சீவ் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு கடைக்கு வந்துள்ளார்.
அந்த சமயத்தில், சஞ்சீவ் தனது மூத்த மகளுடன் சாலையை கடந்த நிலையில், இவர்களுக்கு பின்புறம் பூங்குழலி தனது 6 மாத கைக்குழந்தையோடு சாலையை கடந்துள்ளார். அந்த சமயத்தில், அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் தாய்-மகள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்-மகள் படுகாயமடைந்து உயிருக்காக துடிதுடித்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் இருவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
ஆனால், இருவரும் சஞ்சீவினி கண்ணெதிரில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த வாலிபர், அவருடன் இருந்த இளம்பெண் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் காவல் துறையினர், விபத்தில் பலியான தாய்-மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியாவர்கள் அரும்பாக்கம் பல்லவன் நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நீக்கல் (வயது 27), அசோக் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகா (வயது 24) என்பது உறுதியானது. நண்பர்களான இருவரும் ஆவடியில் நடந்த திருமணத்திற்கு சென்றுவிட்டு அதிகாலையில் வந்தபோது விபத்து நடந்துள்ளது. இதில், நீகால் மதுபோதையில் இருந்துள்ளார். இதனையடுத்து, இருவரின் மீதும் வழக்குப்பதிந்த காவல் துறையினர் கைது செய்தனர்.