திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமிக்கு இன்ஸ்டாவில் காதல் தூது., பாலியல் பலாத்காரம்.. 21 வயது இளைஞர் கைது.!
16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் தனது பெற்றோருடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, உறவினரின் வீட்டிற்கு அருகே வசித்து வந்த மணிபாலன் என்ற ரிஷி (வயது 21) என்ற இளைஞர் சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் வழியாக பழக தொடங்கிய நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி ரிஷி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பான தகவல் சிறுமியின் தந்தைக்கு தெரியவரவே, அவர் நேற்று முன்தினம் திருமங்கலம் W8 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, விழுப்புரத்தில் இருந்த ரிஷியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.