திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என் கூட ஜாலிக்கு ஓகே, தாலிக்கு நோ வா?.. கள்ளகாதலியின் வீடுபுகுந்து கள்ளக்காதலன் செய்த பயங்கரம்..!
தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கள்ளக்காதலியை கள்ளக்காதலன் கத்தியால் குத்திய பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணாநகர், அமைந்தகரை அம்மன் கோவில் தெருவில் வசித்து வசித்து வருபவர் ஏழுமலை (வயது 33). இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரித்து தனியாக வசிக்கிறார். இவருக்கு 10 வயதுடைய மகன் இருக்கிறான். அதேபோல, அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்மணி அம்மு (வயது 27). இவரின் கணவர் இறந்துவிட்டதால், 7 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
ஏழுமலைக்கும் - அம்முவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், தனியாக வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக குடியிருந்துள்ளனர். இந்த நிலையில், திருமணம் தொடர்பாக அம்முவை ஏழுமலை பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த விசயத்திற்கு அம்மு மறுப்பு தெரிவிக்கவே, சம்பவத்தன்று இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ஏழுமலை தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கள்ளக்காதலி அம்முவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். அம்முவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அம்முவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அம்முவிடம் விசாரணை நடத்தி அவரது கள்ளக்காதலன் ஏழுமலையை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.