திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடுரோட்டில் தமிழகத்து WWE சண்டை.. குடும்பியை பிடித்து மல்லுக்கட்டிய கல்லூரி மாணவிகள்.!
கல்லூரி மாணவிகள் 2 பேர் சென்னையின் பரபரப்பு மிகுந்த சாலையில் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வரும் 2 மாணவிகள், நேற்று நடுரோட்டில் தலைமுடியை பிடித்து தாக்கி சண்டையிட்டனர்.
நிகழ்விடத்தில் இருந்த மாணவிகள் சண்டையில் ஈடுபட்ட மாணவிகளை தடுக்க முயற்சித்தும் எவ்வித பலனும் இல்லை. அவர்கள் தொடர்ந்து சண்டையிட்ட நிலையில், அங்கிருந்த மாணவர்கள் விசில் அடித்து அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர்.
மேலும், நிகழ்விடத்தில் இருந்த மாணவர்களே சண்டையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
வழக்கமாக மாணவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சனைக்காக இருதரப்பாக மோதுவது இயல்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், 2 பெண்கள் சண்டையிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு ஆணுக்கு தெலுங்கானாவில் 2 பெண்கள் நடுரோட்டில் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது.