திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கைம்பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்; மறுவாழ்வை நம்பியவருக்கு நடந்த சோகம்.!
சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் 35 வயதுடைய இளம்பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "எனக்கு திருமணம் முடிந்து கணவர் இறந்துவிட்டார். இதனால் நான் தனியே வசித்து வருகிறேன். அண்ணா நகரில் செயல்பட்டு வரும் கம்பியூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.
அந்நிறுவனத்தில் என்னுடன் சத்யஜித் என்ற 35 வயதுடைய நபர் வேலைபார்த்து வந்தார். அவர் முகப்பேர் பகுதியை சேர்ந்தவர். அவருக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. என்னை திருமணம் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்ததால் நெருங்கியும் பழகி வந்தேன். சில மாதங்களுக்கு முன் கோயம்பேடு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு என்னை அழைத்துச்சென்ற சத்யஜித், அங்கிருந்து விடுதிக்கு அழைத்து சென்றார்.
விடுதியில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்தார். நான் மயக்கத்தில் இருந்தபோது என்னை பலாத்காரம் செய்தவர், வீடியோவும் எடுத்து வைத்தார். இதன்பின் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தவர், தான் அழைக்கும்போதெல்லாம் தனிமையில் வரவில்லை என்றால் ஆபாச விடியோவை இணையத்தில் பதிவிடுவேன் எனவும் மிரட்டுகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல் துறையினர் சத்யஜித்தை கைது செய்து நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாக, அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.