திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
4 வயது மகனின் குறைபாடால் மனநலம் பாதித்த தாய்.. மகனுடன் எடுத்த விபரீத முடிவால் கண்ணீர் சோகம்..!
வாய்பேச இயலாத 4 வயது மகனை கொலை செய்த தாய், தற்கொலை செய்துகொண்ட சோகம் சென்னை அருகே நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணாசாலை பெருமாள் முதலி தெருவை சேர்ந்தவர் ஷோபா (வயது 31). இவரின் கணவர் தினேஷ் குமார். இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் வருடத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தினேஷ் குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
ஷோபா வண்ணாரப்பேட்டையில் கணவருடன் வசித்து வந்த நிலையில், தம்பதிகளுக்கு 4 வயதுடைய கீர்த்திக் என்ற ஆண் குழந்தை மகனாக இருக்கிறார். கீர்த்திக் வாய் பேச இயலாதவர் என்று கூறப்படுகிறது. குழந்தையை பேச வைக்க பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லை.
இந்த நிலையில், மகனின் நிலையால் மன உளைச்சலில் இருந்து வந்த ஷோபா, பின்னாளில் மனநல பாதிப்பை எதிர்கொண்டுள்ளார். அவரும் மனநல நிபுணர்களிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தினேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையை அண்ணாசாலையில் உள்ள மாமியாரின் வீட்டில் விட்டுவிட்டு தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கம்போல பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தினேஷ், படுக்கையறை கதவை தட்டியுள்ளார். கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் ஷோபா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். கீர்த்திக் மெத்தையில் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து அண்ணாசாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.