மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாலியை பறித்துச்சென்று, மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி.. புதுமாப்பிள்ளை கைது.!
மனைவிக்கு தாலிபிரித்து கோர்க்கும் நிகழ்வுக்கு, தாலி வாங்க பணம் தயார் செய்ய முடியாத காரணத்தால் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புவனேஸ்வரி என்ற பெண்மணி நடந்து செல்கையில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் புவனேஸ்வரியின் தாலி சங்கிலியை பறித்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பெண்மணி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சம்பவ இடத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த காட்சிகளில், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் உடையை அணிந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதன்பேரில் நடந்த விசாரணையில், யோகேஷ் என்ற 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தாலி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். யோகேஷ் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு 3 மாதத்திற்கு முன்னதாக திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணம் நடந்த 3 ஆவது மாதத்தில் மனைவிக்கு தாலி பிரித்து கட்டும் நிகழ்வு பேச்சுவார்த்தையின் போது, தாலி சரடு வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பணத்தேவையை பூர்த்தி செய்ய பலரிடமும் உதவி கேட்ட நிலையில், கொரோனாவால் யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் தாலி செயினை வழிப்பறி செய்திடலாம் என்ற விபரீத எண்ணம் ஏற்பட்டு, சாலையில் தனியாக வந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு இருக்கிறார். அவரின் திட்டத்திற்கு ஏற்றவாறு புவனேஸ்வரி தனியாக வந்துகொண்டு இருக்க, அவரிடம் கைவரிசை காண்பித்து, அவரது தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளார். யோகேஷை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.