மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைக்கு விளம்பர பேனர் வைக்கையில் சோகம்.. மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் பரிதாப மரணம்.. மக்களே உஷார்.!
தான் பணியாற்றி வரும் நிறுவனத்திற்காக விளம்பர பதாகை வைக்க சென்ற ஓட்டுநர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் தினேஷ் @ அப்பு (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று தனது நிறுவன விளம்பர பதாகையை வைக்க சென்றுள்ளார்.
மதுரவாயலில் உள்ள ஆண்டாள் அழகர் நகரில் உள்ள கடையின் முன்பு விளம்பர பலகையை வைப்பதற்காக, அக்கடையின் முதல் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, உயர் மின்னழுத்த கம்பியில் விளம்பர பலகை மோதியுள்ளது.
இதனால் அப்புவின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார். மேலும், அப்புவுடன் சென்ற ஜெயசந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார்.
அவர் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.