தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் கவனம் தேவை.. 3 உயிர்கள் பரிதாப பலி..! ஆவடியே சோகம்.!!



chennai-avadi-3-died-toxic-gas-attack

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்று தந்தை, மகன், அவர்களை காப்பாற்ற வந்தவர் என 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது ஆவடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆவடி, திருமுல்லைவாயல் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவர் தொழிலதிபர் ஆவார். தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். பிரேம் குமாரின் மனுவை ரதி. தம்பதிகளுக்கு பிரதீப் குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களில் ஒருவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். வீட்டில் இருக்கும் மகள் படித்துவிட்டு வேளைக்கு சென்று வருகிறார். 

பிரேகுமாரின் வீட்டிற்குள் மரங்களும் உள்ள நிலையில், காலி இடத்தில் தண்ணீர் சேகரிக்க வீடு கட்டப்படும் போதே தொட்டியையும் காட்டியுள்ளார். இந்நிலையில், இதனை சுத்தம் செய்ய நேற்று முன்தினம் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு ஆட்கள் யாரையும் நியமனம் செய்யாமல், முன்தினம் இரவில் தண்ணீர் தொட்டியில் இறங்கி பிரேம்குமார் நீரை வெளியேற்றி இருக்கிறார். பின்னர், அதனுள் பிளீச்சிங் பவுடரை போட்டு மூடி வைத்ததாக தெரியவருகிறது.

அதனைத்தொடர்ந்து, நேற்று காலை 09:30 மணியளவில் தண்ணீர் தொட்டியில் இறங்கி பிளீச்சிங் பவுடரை நீர் ஊற்றி வெளியேற்ற நினைத்துள்ளார். அதற்காக தண்ணீர் தொட்டியில் இறங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே பிரேம் விஷவாயு தாக்கி மயங்கவே, அவரை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய மகன் பிரதீப் குமாரையும் விஷவாயு தாக்கியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அண்டை வீட்டாரை உதவிக்கு அழைத்துள்ளனர். 

chennai

அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த பிரமோத் குமார் மற்றும் சாரநாத் ஆகியோரும் தந்தை - மகனை மீட்கும் முயற்சியில் இறங்கி அடுத்தடுத்து தொட்டிக்குள் மரணம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு & மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில், பிரேம் குமார், பிரதீப் குமார், பிரமோத் குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாரநாத் மட்டும் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதீப் மற்றும் பிரமோத் இளம் வயதுள்ளவர்கள் ஆவார்கள். பிரமோத் குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரின் மனைவி நித்யாவும் வேலை பார்த்து வருகிறார். இரண்டு உயிரை காப்பாற்ற வந்த மற்றொருவரும் உயிரிழந்தது என அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.