மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் இறந்த துக்கத்தில் சோகம்: இறப்பிலும் இணை பிரியாத தம்பதி..! குடும்பத்தினர் கண்ணீர்.!
சென்னையில் உள்ள ஆவடி, காமராஜர் நகர் பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 95). காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
சுப்பிரமணியனின் மனைவி வசந்த் அம்மா (வயது 81). தம்பதிகள் இருவரும் தங்களின் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணியன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரது மறைவை அறிந்த வசந்தம்மாளும் சோகத்துடன் இருந்து வந்த நிலையில், அவரும் உடல்நலம் குன்றி பலியானார். வயதான ஜோடி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.