மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுக்கையில் மூதாட்டி மர்ம கொலை.. தலையில் காயம்., வீடெல்லாம் இரத்தம்.. காட்டிக்கொடுத்த எறும்புகள்., மகள்கள் கண்ணீர்.!
தலையில் இரத்த காயத்துடன் மூதாட்டி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னையில் உள்ள ஆவடி, பொதிகை நகர் பவானியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சாவித்ரி (வயது 72). இவரின் கணவர் கடந்த சில நாடுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார். இதனால் சாவித்ரி வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில், இவருக்கு மகன் மற்றும் 4 மகள்கள் இருந்தனர். அனைவரும் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
சாவித்ரிக்கு சொந்தமான வீட்டில் 3 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வந்த நிலையில், இதில் வரும் பணத்தை வைத்து அன்றாட செலவுகளை கவனித்து வந்துள்ளார். நேற்று மாலை நேரத்தில் சாவித்ரியின் வீட்டில் இருந்து அதிகளவு எறும்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்துள்ளன.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சாவித்ரியின் மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தலையில் வெட்டுக்காயத்துடன் இரத்த வெள்ளத்தில் சாவித்ரி படுக்கையில் பிணமாக இருந்துள்ளார். தாயின் சடலத்தை கண்டு மகள்கள் கதறியழுதனர்.
இதுகுறித்து ஆவடி காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சாவித்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.