ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
செல்போனின் பேசியபடி அலட்சியம்.. அலறிய இரயில்வே பயணிகள்., 2 துண்டாகி பறிபோன உயிர்.. மக்களே விழிப்புடன் இருங்கள்.!
சென்னையில் உள்ள ஆவடி, திருமுல்லைவாயல் தந்தை பெரியார் நகர், காமராஜர் தெருவில் வசித்து வருபவர் பழனி (வயது 42). இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்ல, திருமுல்லைவாயல் இரயில் நிலையம் சென்றுள்ளார்.
அப்போது, செல்போன் பேசியவாறு தண்டவாளத்தை கடந்து சென்ற நிலையில், சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார இரயிலில் மோதி பரிதாபமாக பலியாகினார்.
இரயிலில் அடிபட்டதால் பழனியின் உடல் இரண்டு துண்டாகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், செல்போன் பேசியபடி பழனி வருவதை கண்ட பொதுக்களும், பழனியை அபயக்குரலிட்டு எச்சரித்து இருக்கின்றனர். அதனை கண்டுகொள்ளாமல் சென்றதால் துயரம் நடந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி இரயில்வே காவல் துறையினர், பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனிக்கு திருமணம் முடிந்து மஞ்சுளா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அலட்சியமாக அவர் தண்டவாளத்தை கடந்ததால் பரிதாபமாக உயிர் பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.