சகோதரர் தற்கொலை செய்த சோகத்தில், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை..!
தம்பி தற்கொலை செய்த விரக்தியில், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் உள்ள கொரட்டூர் எல்லையம்மன் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 45). இவரது அண்ணன் சேட்டு (வயது 50). இவர்கள் இருவரும் கொரட்டூர் ரயில் நிலையத்தில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து சுரேஷுக்கு முத்துலட்சுமி என்ற ஒரு மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். சேட்டு கடந்த நான்கு வருடங்களாக தனது குடும்பத்தை பிரிந்து, சுரேஷ் வீட்டு அருகாமையில் தனியாக வசித்து வரும் நிலையில், சுரேஷ் குடி போதைக்கு அடிமையானதால் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 'எவ்வளவு நாள் தான் சிகிச்சை எடுப்பது.நம்மால் அனைவருக்கும் தொந்தரவு என்ற மன விரக்தியில், நேற்று முன்தினம் அதில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த தகவல் அருகிலிருக்கும் அவரது அண்ணனுக்கு தெரியவர, அதிர்ச்சியடைந்த அவரும் 'தனக்கு ஆறுதலாக இருந்த ஒருவர் தனது தம்பி மட்டும்தான். அவரே சென்று விட்டார், நாம் இருந்து என்ன பயன்' என்று மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்.
பின் இந்த விஷயம் தொடர்பாக தகவல்றிந்த கொரட்டூர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் பச்சமுத்து மற்றும் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இருவரது உடல்களையும், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஒரே நாளில் அண்ணன், தம்பி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.