திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
100 ஆண்டுகள் பழமை கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி உட்பட 2 பேர் பலி.. சென்னையில் பரிதாபம்.!
நூற்றாண்டுகள் பழமையை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் உள்ள பார்ட் டவுன் தங்கசாலையில் வசித்து வருபவர் இராஜேந்திர தாஸ். இவருக்கு சொந்தமான பழைய வீட்டின் முதல் தளம் திடீரென இடிந்து விழவே, அவ்வழியே கோவிலுக்கு சென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கட்டிடத்தை இடிக்க சென்னை மாநகராட்சி கடந்த 2014ம் ஆண்டே அபாயகரமானது என சம்மன் வழங்கியிருந்த நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அரசால் இடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே விபத்து நிகழ்ந்து 2 பேர் பலியாகியுள்ளனர்.