வங்கதேச பெண்ணை கரம்பிடித்த சென்னை பெண்.... லெஸ்பியன் ஜோடிகள் சமஸ்கிருத முறைப்படி திருமணம்.!



chennai-canadian-girl-married-bangladesh-canadian-girl-ZY53N2

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டது என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால், இன்றுள்ள நவீன யுகத்தில் அவரவரின் திருமணத்தை, தனது துணையை அவர்களே தேர்வு செய்கின்றனர். இதில், தன்பாலின ஈர்ப்பு காரணமாக ஏற்படும் காதல் திருமணத்திற்கும் தடையில்லை. 

தமிழகத்தில் பிறந்து பிராமண குடும்பத்தை சேர்ந்த பெண்மணி சுபிக்ஷவும் - வங்காளதேசத்தை சார்ந்த பெண்மணி டிணா தாஸும் சென்னையில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரின் திருமணமும் தமிழ் பிராமணர் திருமண பாரம்பரியத்தில் நடைபெற்றது. 

தம்பதிகள் இருவரும் தந்தைகளின் மடியில் அமர வைக்கப்பட்டு மாலை மாற்றியதை தொடர்ந்து கன்னிகாதானம் நாடடைபெற்றது. திருமணம் முடிந்ததும் தன்பாலின ஈர்ப்பு ஜோடிகள் தங்களின் வாழ்க்கையில் சிறகடித்து பறக்க தொடங்கியது. 

கைநிறைய சம்பளம் வாங்கும் சுபிக்ஷனா மதுரையை பூர்வீகமாக கொண்டவர். அங்கிருந்து குடும்பத்துடன் கத்தாருக்கு சென்றவர்கள் பின்னர் கனடாவில் உள்ள கல்கரி நகருக்கு இடம்பெயர்ந்துள்ளனர். வங்காளதேசத்தில் வடகிழக்கில் அமைந்துள்ள மூலவிபசார் நகரை சேர்ந்தவர் டிணா தாஸ். இவரின் சகோதரி கனடாவை வசித்து வந்துள்ளார். இவருடன் கடந்த 2003 ல் பெற்றோரோடு டிணா கனடாவுக்கு சென்றுள்ளார். தீணாவுக்கு சிறுவயதில் இருந்தே தன்பாலின ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை அறிந்த பெற்றோர் 19 வயதில் ஆணொருவவருக்கு தீணாவை திருமணம் செய்து வைத்தாலும், 4 ஆண்டுகளில் அவ்வுறவு முறிந்து போயுள்ளது. இதன்பின், சமூக வலைத்தளம் மூலமாக லெஸ்பியன் ஜோடியான இருவரும் சந்தித்து பேசிகொண்டுள்ளனர். பின்னர், அவ்வப்போது நேரில் சந்தித்து பேசி பழகி விஷயம் பெற்றோர் வரை தெரியவே, டிணாவின் சகோதரி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். 

சுபிக்ஷவின் குடும்பம் இருவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சம்ஸ்கிருத முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இருவரும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. லெஸ்பியன் ஜோடிகளின் 6 ஆண்டு காதல் சென்னையில் இணைக்கப்பட்டுள்ளது.