நெஞ்சை பதறவைக்கும் சோக சம்பவம்.. சாமி கும்பிட்டுவிட்டு காரில் வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலி.. 5 பேர் பேர் உயிரிழந்தனர்‍..



Chennai car accident 5 dead on spot

லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மேல்மலையனூர் கோவிலுக்குச்  சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார்‍. இவர்கள் வந்துகொண்டிருந்த கார் அத்திமானம் என்ற இடத்தில் வந்தபோது அங்கு பார்க்கிங் யார்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைய முயன்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் இருந்த சுப்பிரமணி, அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ஒட்டுநர் என 5 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்‍. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.