மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 மடங்கு அதிகரித்த கொரோனா பரவல்.. மெகா ஊரடங்குக்கு வாய்ப்பு?.!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த வருடம் மே மாதம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உறுதியானது. மேலும், டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் உயிரிழப்பும் அதிகரித்தது. இது, கடந்த நவம்பர் மாதம் குறைய தொடங்கிய நிலையில், கொரோனா பாதிப்பு 700 க்கும் கீழ் குறைந்தது. சென்னையின் தினசரி பாதிப்பு 150 க்கும் கீழ் குறைந்தது.
இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை மக்கள் மறந்துவிட்ட நிலையில், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் மக்களை ஒன்றுகூட வைத்த நிலையில், ஒமிக்ரான் வகை கொரோனாவும் பரவ தொடங்கியது. கடந்த டிச. மாத இறுதியில் இருந்தே கொரோனா அதிகரிக்க தொடங்கிவிட்ட நிலையில், கடந்த 20 ஆம் தேதி முதல் சென்னையில் கொரோனா பாதிப்பு உயர தொடங்கியது.
கடந்த 6 நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், டிச. 28 ஆம் தேதி சென்னையில் மட்டும் 194 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழ்நாடு முழுவதும் 612 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 776 ஆக உயர்ந்த நிலையில், பாதிப்பு விரைவில் 1000 த்தை கடக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் கொரோனா வைரஸின் மூன்றாவது அலைபரவல் அச்சம் எழுந்துள்ள நிலையில், சென்னையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை கடக்கலாம் என தெரியவந்துள்ளது. கடந்த டிச. 27 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை சென்னையில் கொரோனா வேகம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
மாநில அளவுகளை ஒப்பிடுகையில் சென்னையில் 50 % பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று தமிழகத்தில் பதிவான 1594 கொரோனா வழக்குகளில், 146 வழக்குகள் செங்கல்பட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டில் தான் கொரோனாவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 8 மாதத்திற்கு பின்னர் மீண்டும் உச்சமெடுத்துள்ளதை அரசின் அறிக்கைகள் உறுதி செய்கிறது.
ஏற்கனவே கொரோனா பதித்தவர்களையும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் கொரோனா தாக்கியுள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதியாகி வருகின்றனர். கொரோனா வைரஸ் நம்மை தாக்காது என்ற அச்சத்தில், பலரும் முகக்கவசம் அணியாமல் வலம்வரும் நிலையில், இந்த பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், டெல்டா வகை கொரோனாவுக்கு வேறு சிகிச்சையும், ஒமிக்ரான் வகை கொரோனாவுக்கு வேறு சிகிச்சையும் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களும் திணறி வருகின்றனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மக்கள் அச்சத்தை உணராமல், முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.