திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் மாயம்.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.. கண்ணீரில் நண்பர்கள்.!
சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியில், மூன்றாம் வருடம் எம்.பி.பி.எஸ் பயின்று வந்த மருத்துவ மாணவர் கார்த்திக். இவர் பழைய சென்ட்ரல் சிறைச்சாலை அருகேயுள்ள மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பயின்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று கார்த்திக் விடுதி அறையில் இருந்து திடீரென மாயமான நிலையில், நண்பர்கள் அவர்களை தேடும் போது கார்த்திக்கின் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அந்த கடிதத்தில், "கடந்த 3 வருடமாக எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி" எழுதப்பட்டு இருந்துள்ளது. இதனால் மாணவர் விபரீத முடிவு ஏதேனும் எடுத்திருக்கலாம் என்று எண்ணி, விடுதி நிர்வாகம் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மாயமான மருத்துவக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை தேடி வருகின்றனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது படிப்பை கைவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளாரா? என விசாரணை நடந்து வருகிறது.