மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காரில் வந்து ஆடுகளுக்கு உணவு கொடுத்து திருடும் சம்பவம்; கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது.!
சோழவரம், செங்குன்றம் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்படுவது தொடர்கதையாக நிகழ்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், செங்குன்றம் காமராஜர் தெருவில் வசித்து வரும் உதயகுமார் (வயது 18), கடந்த மாதம் 24ம் தேதி தன்னிடம் இருந்த 3 சினை ஆண்டுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். திரும்பி வந்து மாலை நேரம் பார்க்கையில் ஆடுகள் மாயமாகின.
இதனால் அதிர்ந்துபோன உதயகுமார், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தபோது, அவருக்கு சொந்தமான 3 ஆடுகளை பெண் உட்பட 3 பேர் காரில் வந்து கடத்தி செல்வது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், குற்றவாளிகளான திருமழிசை ஆதவன் நகரில் வசித்து வரும் அசரத் அலி, அவரின் மனைவி செல்வி (வயது 39), அஜித் குமார் (வயது 24), சரத் குமார் (வயது 28) ஆகியோர் ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. இவர்களை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இவர்களின் வாக்குமூலத்தின் பேரில் எஞ்சிய 3 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.