திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரசவ வலி மாத்திரைகளை போதைக்கு உபயோகம் செய்யும் சிறார்கள் : சென்னையில் சிக்கிய 3 பேர் கும்பல் விவகாரத்தில் பகீர் தகவல்.!
வெளிமாநிலத்தில் இருந்து வலி நிர்வாணி மாத்திரைகளை இறக்குமதி செய்து போதை மாத்திரையாக விற்பனை செய்த 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை உட்பட போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரை உபயோகம் செய்யும் பழக்கம் அதிகரித்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போதை மாத்திரையை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்த அதிகாரிகள், சூளைமேடை சேர்ந்த அலெக்ஸ் எட்வார்ட் (வயது 25), மவுலிக்காரன் (வயது 26), அஜித் (வயது 22) ஆகியோர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததை உறுதி செய்தனர்.
இவர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் பிரசவ வலிக்கு பயன்படுத்தப்படும் சுமார் 1,600 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ஆன்லைன் மூலமாக பீகார் மாநிலத்தில் இருந்து மாத்திரைகள் கொண்டு வரப்பட்டது உறுதியானது.
இந்த மாத்திரைகளை சென்னை மாணவர்களுக்கு ஒன்று ரூ.60 முதல் ரூ.90 வரை என விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.