மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயில் பகுதியளவு இரத்து..!
ஆந்திரா, கேரளா போன்ற பல மாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில இரயில்கள் முழுவதும், சில இரயில்கள் பகுதியளவு இரத்து செய்யபடுகிறது.
மழையினால் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, இரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதனால் கேரளா - தமிழகம் இடையே இயக்கப்பட்டு வரும் இரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பாலக்காடு சந்திப்பு வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி அதிவிரைவு இரயில் பகுதியளவு இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் 11.20 மணிக்கு புறப்படவேண்டிய திருநெல்வேலி - புனலூர் இரயில் இடையே இரத்து செய்யப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் தினசரி விரைவு இரயில், நேற்று செங்கோட்டையுடன் நிறுத்தப்பட்டது. கொல்லத்தில் இருந்து புறப்படவேண்டிய கொல்லம் அதிவிரைவு வண்டி, செங்கோட்டையில் இருந்து புறப்படும்.
ஆரியங்காவு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்பட்ட பின்னரே இரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.