மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்த திமுக வழக்கறிஞர் கொலை முயற்சி.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.!
சட்டவிரோத கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற திமுக வழக்கறிஞர் 6 பேர் கும்பலால் கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள எர்ணாவூர், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஹரிகுமார் (வயது 37). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும், திமுகவின் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் ஆவார். நேற்று முன்தினம் இரவில் திருவெற்றியூரில் காரில் வீட்டிற்கு இவர் சென்றிக்கொண்டு இருந்தார்.
அப்போது, கன்னீளால் லே-அவுட் பகுதி அருகே வருகையில், இவரின் காரை இடைமறித்த 6 பேர் கும்பல், சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பதறிப்போன ஹரிகுமார் காரில் இருந்து தப்பி செல்ல முயற்சித்த நிலையில், கும்பல் அவரை விரட்டி வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், திருவெற்றியூரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். பின்னர், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா விற்பனை செய்வதை காட்டிக்கொடுத்ததால் கொலை சம்பவம் நடந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை ஏற்ற எண்ணூர் காவல் துறையினர் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக 6 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.