மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பயங்கரம்... 4 பேர் கும்பலால் 23 வயது இளைஞர் சரமாரி வெட்டிக்கொலை.!
சென்னையில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் உமர் பாஷா (வயது 23). இவர் பீரோ செய்யும் தொழிலை செய்து வருகிரர். உமர் பாஷாவின் மனைவி சுபாஷினி. நேற்று இரவில் உமர் பாஷா மசூதியில் தொழுகை நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலானது, உமர் பாஷாவை வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த எண்ணூர் காவல் துறையினர், உமரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.