மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் நடுக்காட்டில் பெண்., காஞ்ச மாடு போல காரில் பாய்ந்த அந்த 4 பேர்.. கழுத்தில் கத்தி., நடந்த பயங்கரம்.!
சென்னை மதுரவாயல் - தாம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவில் இளம் பெண் காரில் லிப்ட் கேட்டுள்ளார். நடுராத்திரியில் பெண்மணி தனியாக நின்றதால், அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு காரை நிறுத்திய ஓட்டுனர் பெண்ணை தனது காருக்குள் ஏற்றியுள்ளார்.
அப்போது, இருட்டு பகுதியில் மறைந்திருந்து நான்கு பேர் திடீரென ஓடிவந்து காருக்குள் ஏறி டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.2 ஆயிரம் பணம் பிரித்துள்ளனர். இதனைகவனித்த மற்றொரு வாகன ஓட்டி போரூர் சுங்கச்சாவடிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு காவல் துறையினரிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சைரன் சத்தத்துடன் விரையவே, சுதாரித்த கொள்ளையர்கள் அதிகாரிகள் இறங்குவதற்குள் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். இளம் பெண்ணை மட்டும் ஓட்டுநர் பிடித்து வைத்துள்ளார். பிடிபட்ட பெண்ணிடம் காவல்துறையின் விசாரணை நடத்தினர்.
அவர், கோயம்பேடை சார்ந்த பெண்மணி என்பதும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று அந்த நான்கு கொள்ளையர்கள் பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும், வாகனம் வரும் வழியில் நின்று உதவி கேட்பது போல பாவனை செய்யுமாறு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். காவல் துறையினர் கொள்ளைக்கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.