மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய், பாட்டிக்கு தூக்கமாத்திரையை கொடுத்துவிட்டு, காதலனுடன் இரவு முழுதும் உல்லாசமாக இருந்த சிறுமி.! சென்னையில் பகீர்.!
சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மன்னார்குடியை சேர்ந்த ஒரு இளைஞரை அந்த பெண் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் சிறுமியின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களது காதலை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் சிறுமி அந்த இளைஞருடன் பள்ளிக்கு அருகில் நின்று பேசுவதை உறவினர் ஒருவர் பார்த்துவிட்டு அந்த இளைஞருடன் சண்டை போட்டு இருக்கிறார். தகராறு முற்றியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், விரைந்து சென்று சிறுமியின் உறவினர் மற்றும் அந்த இளைஞர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் சிறுமியின் வீட்டிற்கு இரவு நேரங்களில் அந்த இளைஞர் சென்று வந்தது தெரிய வந்துள்ளது.
சிறுமியுடன் தாய் மற்றும் பாட்டி மட்டுமே வசிக்கின்ற நிலையில் அவர்களுக்கு சிறுமி இரவு நேரங்களில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து விட்டு அவர்களை நன்றாக தூங்க வைத்துவிட்டு அதன் பின் தன் காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பாராம்.
அந்த மன்னார்குடி காதலன் தான் சிறுமிக்கு தூக்க மாத்திரைகளை வாங்கி கொடுத்ததும், அவருக்கு செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி கொடுத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி தொடர் விசாரணை நடத்தி வரும் போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.