மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#GoldSilverPrice: இன்றைய தங்கம் விலை நிலவரம் எப்படி?.. விவரம் உள்ளே..!!
உலகளவில் உள்ள சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 22 கேரட் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலையானது சிறிதளவு இறக்கத்தை சந்தித்து பின்னர் மீண்டும் ஏறியது. இந்த நிலையில் தற்போது ரூ.44,000 சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அது போல கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்டு, ஒரு கிலோ வெள்ளியில் விலை ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.