மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: கல்லூரி மாணவி சத்யாவின் தந்தை விஷம் குடித்து உயிரிழப்பு; மருத்துவர்களின் சோதனையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
தனது மகள் உயிரிழந்த வருத்தத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சோகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி, ஆதம்பாக்கத்தை சேர்ந்த பெண் தலைமை காவலர் ராமலட்சுமி. இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகியுள்ளார். இவரின் கணவர் மாணிக்கம், தம்பதிக்கு 20 வயதுடைய சத்யா என்ற மகள் இருக்கிறார். இவர் தி.நகரில் செயல்பட்டு வரும் கல்லூரியில் படித்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் தயாளனின் மகன் சதீஷ், வெட்டியாக ஊரைச்சுற்றி வந்த நிலையில் சத்யாவை ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையில், நேற்று மதியம் 01:30 மணியளவில் கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை இரயில் நிலையம் சென்ற மாணவியை சதீஷ் இரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்தான்.
அங்கிருந்து தப்பி சென்ற சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் அவன் கைது செய்யப்பட்டான். இதற்கிடையில், நள்ளிரவு நேரத்தில் மாணவியின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகளின் இறப்பு செய்தியை கேட்டு துயரமடைந்த சத்யாவின் தந்தை மாணிக்கம், மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
விஷம் குடித்த பின்னர் அவரின் நெஞ்சு கடுமையாக எரிந்ததால் மாரடைப்பு வந்ததைப்போல துடிதுடித்த நிலையில், குடும்பத்தினர் மாரடைப்பு என எண்ணி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து இருக்கிறார். மருத்துவர்களின் சோதனையில் மாணிக்கம் விஷம் குடித்து அம்பலமானது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் முழு விபரம் வெளியேவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.