மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி உயிரிழந்ததும் கணவன் செய்த பகீர் காரியத்தால் உறவினர்கள் பேரதிர்ச்சி.. அளவுகடந்த அன்பால் துயரம்..!
தனது மனைவி இயற்கை எய்தின சோகத்தில் கணவன் விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சிக்க, உயிரை காப்பாற்றிய மருத்துவமனையின் கழிவறையில் தன் உயிரை இழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி, பெருவாயல் பகுதியில் வசித்து வருபவர் ஆசீர்வாதம் (வயது 54). இவரின் மனைவி கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். மனைவியின் மீது அபரீதமான அன்பு வைத்திருந்த ஆசீர்வாதம், அவரின் மறைக்கு பின்னர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
அவருக்கு ஆறுதல் கூறி உறவினர்கள் மனதை தேற்றி வந்த நிலையில், உறவினர்களின் ஆறுதலை ஆசிர்வாதத்தை மனம் ஏற்றுக்கொள்ள தயங்கியுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி ஆசீர்வாதம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆசீர்வாதம் உயிர்பிழைத்துக்கொண்ட நிலையில், இன்று அதிகாலை கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரம் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கதவை திறந்து எட்டி பார்க்கையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆசிர்வாதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.