#Breaking: பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் - கடலூர் மாவட்ட விவசாயி அதிரடி செயல்..! நாளை விசாரணை..!
திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்றதும் கடந்த 2023-ல் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 21 தொகுப்புகள் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டு பல்வேறு விமர்சனத்தை சந்தித்தன. நடப்பு ஆண்டு 2023 பொங்கலுக்கு பணத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு கிடைக்குமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று மட்டுமே அறிவிப்பு வெளியிட்டது. பொங்கல் தொகுப்பு & கரும்பு தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறவில்லை. மேலும், கரும்பு விளைவித்துள்ள விவசாயிகளிடம் இருந்தும் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை.
இதனால் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் கரும்புகளை பயிரிட்ட விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிய நிலையில், கடலூர் மாவட்ட விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு நாளை நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.