மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை ஐ.ஐ.டி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: மேற்கு வங்கத்தில் குற்றவாளி கைது.. தனிப்படை அதிரடி.!
ஐ.ஐ.டி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், தனிப்படை காவல் துறையினர் மேற்கு வங்கத்தில் முதல் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி-யில் கடந்த 2017 ஆம் வருடம் பயின்று வந்த மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த தலித் மாணவி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில், தன்னுடன் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், மேற்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். மேலும், 3 வருடமாக வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்து மாதர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் உள்ள 8 குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, அதிகாரிகள் மேற்கு வங்கம் மாநிலத்திற்கு சென்றனர். அங்கு, மேற்கு வங்க காவல் துறையினர் உதவியுடன் கிங்சோ தீப்சர்மா என்பவனை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளி சென்னை அழைத்துவரப்படுவார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.