மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டா காதலியை இன்ஸ்டன்ட் தாயாக்கி கைவிட்ட காதலன்.. கேள்விக்குறியாக 18 வயது சிறுமியின் வாழ்க்கை., கையில் பச்சிளம் குழந்தை.!
17 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்த கயவன், அவருடன் தனிக்குடித்தனம் நடத்தி குழந்தை பிறந்ததும் கைவிட்டு சென்ற பயங்கரம் நடந்துள்ளது. படிக்கும் வயதில் காதல் என்ற மாய வலையில் விழுந்தால், காதலன் என அறியா வயதில் அத்துமீற அனுமதித்தால் எப்படியான சோகம் நடக்கும் என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள பெரியகுப்பம், எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் மோனிஷ் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். புளியந்தோப்பு பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யும் வழக்கத்தை வைத்துள்ளார்.
17 வயது சிறுமிக்கும் - மோனிஷுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் வழியே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, காதலருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
தனிகுடித்தனத்தில் சிறுமி கர்ப்பமாகவே, எழும்பூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறக்க, அதனைத்தொடர்ந்து பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு 18 வயதாகிவிட்ட காரணத்தால், முறைப்படி திருமணம் செய்ய காதல் கணவர் மோனிஷிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மோனீஷோ திருமணம் செய்துவிட்டு, சிறுமியுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் நிலைமையை உணர்ந்த சிறுமி மற்றும் அவரின் பெற்றோர், புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் ஊர்ப்பக்கம், ஆதனூரில் பதுங்கியிருந்த மோனிஷை போக்ஸோவில் கைது செய்தனர்.