மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனதை கல்லாக்கி தாய் செய்த பகீர் காரியம்.. இரண்டரை வயது பிஞ்சு, தாய் மரணம்.. அந்த ஒரு வார்த்தையால் சோகம்.!
நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பேச்சு வர வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததால், மனமுடைந்த தாய் குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள கல்பாக்கம், நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 40). இவர் கட்டிட கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். பூபதியின் மனைவி கோடீஸ்வரி (வயது 32). இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயது ஹரிகரசுதன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
குழந்தை ஹரிஹரசுதான் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, வாய் பேச இயலாமல் இருந்து வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனையில் சிகிச்சையில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தையின் உடல் நலனில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மேலும், மருத்துவர்களும் குழந்தை பேச வாய்ப்பில்லை என கூறியதாக தெரியவருகிறது.
இதனால் கோடீஸ்வரி மிகுந்த மன உளைச்சலோடு இருந்த நிலையில், குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து பயந்த தாய் விபரீத எண்ணத்திற்கு சென்றுள்ளார். நேற்று குழந்தையை தாய் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த நிலையில், மூச்சுத்திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கோடீஸ்வரியும் தனது அறையில் மின்விசிறியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் காவல் துறையினர், தாய் மற்றும் மகனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.