மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீதிமன்றம் சென்றால் பயனே கிடையாது; போராட்டம் நடத்துங்கள் - பரந்தூர் மக்களிடம் முன்னாள் நீதிபதி பரபரப்பு பேச்சு.!
பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் போராட்டம் நடத்துங்கள் என நீதிபதி பேசினார்.
சென்னையின் இரண்டாவது பிரம்மாண்ட விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் அமைக்க மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்துவிட்டன. அதற்கான முதற்கட்ட களஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையம் அமைக்க உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதி முழுக்கமுழுக்க விவசாயம் மற்றும் எரிகளால் நிறைந்த பூமி என்பதால், சுற்றுசூழல் ஆர்வலர்களும் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அரசியல் கட்சியினர் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பரந்தூர் மக்களிடையே உரையாற்றிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன், "நீங்கள் நீதிமன்றம் சென்றால் எவ்வித பயனும் இருக்காது. விமான நிலையம் வேண்டாம் என்றால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார். நீதிபதியின் பேச்சு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.