வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை சவக்கோலத்தில் பார்த்த பெற்றோர்.. போதை ஆசாமிகளால் சோகம்.!
மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் மகனை பார்க்க வேண்டிய பெற்றோர், மகனின் இறுதி காரியத்தை செய்ய வேண்டிய சூழ்நிலை குடிகார ஆசாமிகளால் ஏற்பட்டுள்ள சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கப்பல் மாலுமி
சென்னையில் உள்ள காசிமேடு, குமரன் சிங்காரவேலு நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவரின் மனைவி தமிழ்செல்வி. தம்பதிகளின் மகன் குமரன். இவர் கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக பணியில் கிடைத்த விடுமுறையைத் தொடர்ந்து சொந்த ஊர் வந்தவர், பின் மீண்டும் பணிக்கு சில மாதங்களில் திரும்பவிருந்தார்.
இதையும் படிங்க: போதையில் புத்தாண்டு கொண்டாட்டம்.. தட்டிக்கேட்டவர் 3 பேர் கும்பலால் வெட்டிக்கொலை.!
புத்தாண்டு கொண்டாட்டம்
இதனால் அவருக்கு 15 நாட்களுக்குள் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்து, அதற்கான பணிகளை கவனித்து வந்துள்ளார். இதனிடையே, நேற்று இரவில் புத்தாண்டு கொண்டாட்டம் அவரின் பகுதியிலும் களைகட்டி இருக்கிறது.
போதையில் இடையூறு
அப்போது, குமரன் தனது தெரு வழியாக நடந்து வந்துகொண்டு இருந்தார். அதே பகுதியில் வசித்து வரும் முத்து, சரவணன், ஆகாஷ், ஒரு சிறுவன் என 4 பேர் போதையில் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வண்ணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர் குதிகாலை
இதனை கண்டும் காணாதபடி வந்த குமரன், அவர்களை கடந்து வரும்போது, விலகி நிற்குமாறு கூறி கடந்துள்ளார். இதனால் அங்கு வாக்குவாதம் உண்டாகி, போதை இளைஞர்களை குமரன் கண்டித்து இருக்கிறார். ஆவேசமணடந்த போதை கும்பல் குமரனை குத்திக்கொலை செய்து தப்பிச் சென்றது.
நால்வரும் கைது
இந்த சம்பவத்தில் குமரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், காசிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்தனர். நல்ல வேளையில் இருக்கும் மகனுக்கு, சில நாட்களில் திருமணம் செய்து வைக்கலாம் என எதிர்பார்த்த பெற்றோர், மகனின் கருமகாரியத்தை செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டியூசன்ல படிக்கிற பாடமா இது? 22 வயது இளம்பெண்ணுடன்., 15 வயது சிறுவன்.. போக்ஸோவில் பெண் கைது.!