"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
30 வயதுடைய பெண் கட்டிட தொழிலாளி கொல்லப்பட்ட விவகாரத்தில் கொத்தனார் கைது.. காவல்துறை விசாரணை.!
சென்னையில் உள்ள கே.கே நகர், பாரதிதாசன் சாலை பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது 30). சம்பவத்தன்று கட்டிட தொழிலாளியான சரண்யா கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், சரண்யாவை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (வயது 40) கொலை செய்தது தெரியவந்தது. இவர் தலைமறைவாகி இருந்தததால், அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இன்று தலைமறைவான வேல்முருகன் திருப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வரும் அதிகாரிகள், கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னரே பெண் கொலைக்கான காரணம் தெரியவரும்.