மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊட்டி இன்பசுற்றுலாவில் சோகம்; 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து சிறுமி பலி., 20 பேர் படுகாயம்.!
சென்னையில் உள்ள கொளத்தூர், பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்று இருந்தனர். இவர்கள் அங்குள்ள கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவுப்பகுதியில், மினி பேருந்தில் பயணித்துள்ளனர்.
அச்சமயம், வளைவுப்பகுதியில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர், பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.